சர்க்கஸில் திடீரென மிரண்ட யானைகள்: திடுக் வீடியோ

Report Print Balamanuvelan in ஜேர்மனி
175Shares
175Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் Osnabrück நகரில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றின்போது திடீரென மிரண்ட இரண்டு யானைகள் இன்னொரு யானையை மோதித்தள்ளும் திடுக்கிடச் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மூன்று யானைகள் வேடிக்கை காட்டும் அந்த நிகழ்ச்சியில் ஒரு யானை தன் மீது அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணுடன் பார்வையாளர்கள் முன், கால்களைத் தூக்கி இரண்டு கால்களால் நிற்கிறது.

பின்னர் பின்னிரண்டு கால்களைத் தூக்கி முன்னங்கால்களில் தன் முழு பலத்தையும் காட்டி நிற்கிறது.

பார்வையாளர்கள் அதை ரசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென அதன் பக்கத்தில் நின்ற இரண்டு யானைகளும் சொல்லி வைத்தாற்போல் அதை மோதித் தள்ளுகின்றன.

பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் போய் அந்த யானை விழுகிறது. பார்வையாளர்கள் அதிர்ச்சியடைய விலங்குகளை பயிற்றுவிப்பவர்கள் அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படாத நிலையில் மீண்டும் சர்க்கஸ் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றதுதான் ஹைலைட்டான விடயம்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்