ஜேர்மனியில் வரலாறு காணாத வெயில்: வறண்ட நிலங்களும் வனத்தீயும்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
144Shares
144Shares
lankasrimarket.com

வறண்ட நிலங்களும் வனத்தீயும் ஒரு பக்கம், கிடைத்த வெயிலில் சூரியக் குளியல் போடும் செல்வந்தர்கள் மறுபக்கம், அறுவடை குறித்த கவலையில் விவசாயிகள் என பல தரப்பினர் மீதும் வெவ்வேறு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ஜேர்மனியின் தட்பவெப்பநிலை.

வடகிழக்கு ஜேர்மனியில் சமீப மாதங்களாக சுத்தமாக மழையே இல்லை. சதுர மீற்றருக்கு வெறும் 50 லிற்றர் மழை மட்டுமே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இது வழக்கமான அளவில் பாதிதான்.

Lower Saxonyயில் காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தென்மேற்கு ஜேர்மனியில் சில நகரங்களில் பெய்த மழையால் பெரு வெள்ளம் ஏற்பட்டது.

நாடு முழுவதும் காட்டுத்தீயின் அபாயம் மிக அதிகமாக காணப்படுகிறது. சமீப சில வாரங்களாக 100 இடங்களில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்துள்ளனர்.

Oder-Spree பகுதியில் பற்றிய தீயை அணைக்க 40 தீயணைப்பு வீரர்களுக்கு 13 மணி நேரம் பிடித்தது.

இதற்கிடையில் Saxony-Anhalt பகுதியில் தீயை அணைக்க தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை நீச்சல் குளங்கள் போன்ற இடங்களிலிருந்தெல்லாம் உறிஞ்சி வருகின்றனர்.

வறட்சி தீயை ஏற்படுத்துவதோடு விவசாயிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பல விவசாயிகள் தங்கள் பயிர்களை முன் கூட்டியே அறுவடை செய்து வருகின்றனர். வரும் மாதங்களில் பயிர்கள் விரைந்து முதிர்ச்சியடைந்து விடும் அதே நேரத்தில் மழை பற்றாக்குறை காரணமாக விளைச்சல் குறைவாகவே இருக்கும். இதற்கிடையில், ஏற்படும் திடீர் வெள்ளமோ பயிர்களை மொத்தமாக காலி செய்துவிடும்.

உருளைக்கிழங்கு, கரும்பு மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றிற்கு கோதுமையை விட அதிகம் தண்ணீர் தேவை. ஆகவே ஜேர்மனியின் மக்காச்சோளப் பயிர்கள் அசாதாரண வறண்ட தட்பவெப்பநிலை காரணமாக பெரும் பாதிப்பை அடைந்துள்ளன.

அதீத வறட்சி மரங்களுக்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துவதோடு அவற்றிலிருந்து மீள அவற்றிற்கு நீண்ட காலம் பிடிக்கும். ஆனால் மரங்களுக்கு நல்ல நினைவாற்றல் உண்டு என்பதால் அவை இதுபோன்று பல ஆண்டுகள் தொடர்ந்து வறட்சி நிலவினால் தட்பவெப்பநிலைக்கு ஏற்றார்ப்போல் தங்களை மாற்றிக் கொள்ளும். மரங்களெல்லாம்

அழிந்து சப்பாத்திக் கள்ளி நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்வதைத் தவிர்க்க சில ஜேர்மன் நகரங்கள் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுமாறு தங்கள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்