நேட்டோ பங்கு மற்றும் இராணுவச் செலவினங்கள் பற்றி மெர்க்கல் விளக்கம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
98Shares
98Shares
lankasrimarket.com

ஜேர்மனி NATO நட்பு நாடுகளின் அழுத்தம் காரணமாக 2019 ஆம் ஆண்டி ஜேர்மன் ராணுவத்தின் ஆயுதப்படை பிரிவை அதிரிக்கும் பொருட்டு வரவு செலவு திட்டத்தில் €42.9 billion ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் நடைபெறவிருக்கும் NATO நாடுகளின் கலந்தாய்வில் கலந்துகொண்டு சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கல், இராணுவ கூட்டணியை உறுதிப்படுத்தி, அதன் எதிர்கால திட்டம் குறித்து விவாதிக்கவுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் நேட்டோவின் சவால்கள் கடுமையாக மாறிவிட்டன என மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

உக்ரேனிய கிரிமியா தீபகற்பத்தின் ரஷ்ய இணைப்பு மற்றும் கிழக்கு உக்ரேனில் கிளர்ச்சியாளர்களுக்கு மாஸ்கோவின் ஆதரவு ஆகியவற்றை தொடர்ந்து, நேட்டோ கூட்டணியை பாதுகாப்பதில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கு, நாம் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும், உதாரணமாக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒரு இருப்பு மூலம் என கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்