10 பேரை கொலை செய்து ஜேர்மனியை அதிரவைத்த பெண்: நீதிமன்றம் கொடுத்த அதிரடி தண்டனை

Report Print Vijay Amburore in ஜேர்மனி
340Shares
340Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் இனவெறி காரணமாக 10 பேரை கொலை செய்த பெண்ணுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஜேர்மனியில் நாஜிக்களை ஆதரிக்கும் குழு ஒன்றினை சேர்ந்தவர் Beate Zschaepe (45). இவர் கடந்த 2000 முதல் 2007 க்கு இடைப்பட்ட காலங்களில், எட்டு துருக்கிய வம்சாவளியினர், ஒரு கிரேக்க நாட்டவர் மற்றும் ஒரு பெண் காவல் அதிகாரி என 10 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார்.

ஜேர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், கடந்த 2011ம் ஆண்டு கைது செய்தனர்.

இனவெறியின் காரணமாகவே அவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி படுத்தப்பட்ட நிலையில், நேற்று அவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு வழக்கினை விசாரித்த நீதிபதி, Beate-விற்கு ஆயுள் தணடனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்