உங்கள் கணவருடன்தான் எனக்கு பிரச்சினை, உங்களுடன் இல்லை: உறவாடிய ஏஞ்சலாவும் மெலானியாவும்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
208Shares
208Shares
lankasrimarket.com

காலையில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலை கிழி கிழியென கிழிக்க பின்னர் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் ஏஞ்சலாவும் டிரம்பின் மனைவியான மெலானியாவும் உறவாடி மகிழ்ந்த சம்பவம் நடைபெற்றது.

மாநாட்டின் முதல் நாளே டிரம்ப் ஜேர்மனியைத் தாக்கினார். ஜேர்மனி 60 முதல் 70 சதவிகிதம் எரிபொருளை ரஷ்யாவிலிருந்து பெறுகிறது, அது சரியா? அது சரியில்லை என்பது தொடங்கி வெளுத்து வாங்கினார்.

ஏஞ்சலாவும் சும்மா இருக்கவில்லை, ஜேர்மனி ஒரு சுதந்திர நாடாக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், அதனால்தான் நம்முடைய கொள்கைகளை நாமே வகுத்துக் கொள்கிறோம், நம்முடைய முடிவுகளையும் நாமே எடுத்துக் கொள்கிறோம் என்றார் அவர்.

டிரம்பின் கருத்துகளுக்கு அமெரிக்காவிலேயே விமர்சனங்கள் எழுந்தன, நமது நீண்டகால கூட்டாளியான ஜேர்மனியை அவமதிக்கும் வகையில் அதிபர் டிரம்ப் பேசுவது ஜேர்மனிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் செயல் என்று குடியரசுக் கட்சியின் தலைவர்கள் சிலர் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

இந்நிலையில் பின்னர் நடைபெற்ற பார்ட்டியில் டிரம்ப் ஏஞ்சலாவுடன் நல்ல முறையில் பேசிக்கொண்டதோடு டிரம்பின் மனைவியான மெலானியாவும் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலும் நீண்ட நேரம் அளவளாவிக் கொண்டனர்.

முன்னாள் சுலோவேனிய மொடலான மெலானியாவுக்கு ஜேர்மன் மொழியும் நன்கு தெரியும் என்பதால் அவருக்கு ஏஞ்சலாவுடன் உறவாட மொழிப்பிரச்சினயும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்