ஓய்வை அறிவித்த ஜேர்மன் வீரரை பாராட்டிய துருக்கி ஜனாதிபதி

Report Print Kabilan in ஜேர்மனி
349Shares
349Shares
ibctamil.com

புலம்பெயர்ந்தவன் என அவமானப்படுத்தப்பட்டதால் ஓய்வு முடிவை அறிவித்த ஜேர்மன் கால்பந்து வீரர் மெசுட் ஒஸிலை, துருக்கி நாட்டு ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

ஜேர்மனி கால்பந்து அணி வீரர் மெசுட் ஒஸில்(29), ரஷ்ய உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் விளையாடினார். ஆனால், இவரது பூர்வீகம் துருக்கியாகும்.

ரஷ்ய உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கு முன்பாக, இவர் துருக்கி நாட்டு ஜனாதிபதி எர்டோகனை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி, ஜேர்மனி அணிக்காக உண்மையில் அவர் விசுவாசமாக விளையாடினாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அத்துடன், ஜேர்மனி அணியின் முதன்மை அதிகாரிகள் சிலர் அந்த சந்திப்பு குறித்து விளக்கம் கேட்டார்கள். மேலும், அவர் புலம்பெயர்ந்தவன் என்று தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதால் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், துருக்கி நாட்டு ஜனாதிபதி எர்டோகன் இதுகுறித்து கூறுகையில் ‘நான் மெசுட் ஒஸிலுடன் தொலைபேசியில் பேசினேன். அவருடைய அறிக்கை முழுவதும் நாட்டுப்பற்றை போற்றும் வகையில் இருந்தது.

இது பாராட்டக்கூடிய நடத்தையாகும். நான் ஓஸிலின் கண்களில் முத்தமிட்டேன். ஜேர்மனி அணியின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்த ஒரு இளைஞருக்கு எதிரான இதுபோன்ற இனவெறியை ஏற்றுக் கொள்ள முடியாது’ என தெரிவித்துள்ளார்.

Kayhan Ozer/Presidential Palace/REUTERS

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்