தமிழ்நாட்டிற்கு வந்த ஜேர்மன் பயணி மீது தாக்குதல்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
423Shares
423Shares
ibctamil.com

ஜேர்மன் பயணி மீது தாக்குதல் நடத்தி செல்போனை பறிக்க முயன்ற 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜேர்மன் நாட்டை சேர்ந்தவர் தி ஹாவ்(29). இவர் இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு வந்தவர் சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்துள்ளார். சேப்பாக்கத்தில் பெல்ஸ் சாலையில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வந்த 3 கொள்ளையர்கள், இவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றுள்ளனர், அப்போது ஜேர்மன் பயணியின் தலையில் தாக்கியுள்ளார். இருப்பினும் தனது செல்போனை விடாமல் பிடித்துக்கொண்டு, சத்தம்போட்டு கூச்சலிட்டுள்ளார்.

இதனால், கொள்ளையர்கள் தப்பித்து ஓடியுள்ளனர். அடிபட்டு கிடந்த இவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு தலையில் 5 தையல் போடப்பட்டுள்ளது. அவர் அளித்த புகாரின்பேரில் பொலிசார் திருவொற்றியூர் கார்கில் வெற்றி நகரைச்சேர்ந்த சதீஷ்(20), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஷியாம் (23), பிரசன்ன குமார்(20) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்