900 மில்லியன் மக்களைக் கொல்லக் கூடிய கொடிய நோய் - முன்னணி மருத்துவ நிலையம் எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in ஜேர்மனி
250Shares
250Shares
ibctamil.com

இதுவரைக்கும் பிராங்பேர்ட், ஜெர்மனி, கராகஸ், மற்றும் வெனிசுலா இல் 400 இற்கும் மேற்பட்ட நோயாளர்களும், 50 இறப்புக்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

நோயாளிகள் காய்ச்சல், இருமல், குழப்பமான மனநிலையுடன் பிரதிபலிக்கப்பட்டனர். சிலர் மூளை வீக்கத்துக்கு ஆளானதுடன் அவர்கள் கோமா நிலைக்கும் தள்ளப்பட்டிருந்தனர்.

ஆய்வாளர்கள் இந் நோய்க்கு காரணமான அங்கியை அடையாளப்படுத்த முடிந்திருக்கிறது.

இது ஒரு புதுவகை பராஅன்குளுவென்ஸா வைரஸ். இது சுவாசத்தொகுதி வைரஸ் வகையைச் சார்ந்தது. இதை விஞ்ஞானிகள் parainfluenza Clade X எனப் பெயரிட்டள்ளனர்.

இது இருமல் மூலம் பரவுகிறது. இதற்கான கடும் அறிகுறிகள் வெளிப்பட ஒரு வாரங்கள் எடுக்கிறது. தொற்றும் தன்மையுடையது.

ஒரு கற்பனை சோதனை, யதார்த்தம் போன்று வடிவமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கணிப்பில் அது பரவ ஆரம்பித்து 20 மாதங்கள் கடந்த பின் 150 மில்லியன் இறப்புக்களை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்காவில் மட்டும் 15-20 மில்லியன் இறப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.

தடுப்பு மருந்தும் இல்லாதிருப்பின் இவ் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. தடுப்பு மருந்து உருவாக்கம் தோல்வியடைந்திருப்பின் இவ் எண்ணிக்கை 900 மில்லியனாக இருந்திருக்கும் என்கின்றனர், இது உலக சனத்தொகையின் 10 வீதம்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்