அகதிகளுக்கான சர்ச்சைக்குரிய முதல் பரிசீலனை மையத்தை திறந்த பவேரியா

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தெற்கு ஜேர்மன் மாகாணமான பவேரியா ஆஸ்திரிய எல்லை வழியாக ஜேர்மனிக்குள் வரும் புலம் பெயர்வோரின் ஆவணங்களை பரிசீலிக்கும் சர்ச்சைக்குரிய முதல் பரிசீலனை மையத்தை திறந்துள்ளது.

இந்த மையம் திறக்கப்பட்டதின் நோக்கங்களில் ஒன்று புகலிடம் கோருவோரின் எண்ணிக்கையை குறைப்பதாகும்.

புகலிடம் கோருவோர், ஜேர்மனி நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்வரையில் இங்கு தங்க வைக்கப்பட்டிருப்பார்கள். 1000 முதல் 1500 அகதிகள் தங்கும் வசதியுடைய ஏழு மையங்களை பவேரியா அமைக்க உள்ளது.

ஜேர்மன் உள் துறை அமைச்சரான Horst Seehoferஇன் புலம் பெயர்தல் மெகா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர்வோரை எல்லையிலேயே திருப்பி அனுப்ப வேண்டும் என்ற அவரது திட்டம் அவர் கூட்டணிக் கட்சியாக உள்ள ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் அரசில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில், பின்னர் அவருக்கும் ஏஞ்சலா மெர்க்கலுக்கும் இடையே செய்யப்பட்ட கடைசி நிமிட ஒப்பந்தத்தின் விளைவாக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய மையங்களை அமைக்கும் முடிவு ஃபெடரல் அரசாங்க மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றின் பொறுப்பு ஜேர்மனியின் மாகாணங்களின் கையில்தான் உள்ளது.

அக்டோபரில் பவேரியாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த மாகாணம் முதல் மையத்தை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற மாகாணங்களில் சில இத்தகைய மையங்களை அமைக்கும் திட்டத்தை தள்ளிப் போட்டுள்ளன, வேறு சில இத்திட்டத்தில் பங்கு கொள்ளவே மறுத்து விட்டன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்