சுவைமிக்க பிரெஞ்சு பிரைக்காக முட்டிக்கொள்ளும் இரண்டு நாடுகள்: சுவாரஸ்ய பின்னணி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரெஞ்சு பிரையை கண்டுபிடித்தவர் யார் என்ற விடயத்திற்காக பிரான்சும் பெல்ஜியமும் குடுமி பிடி சண்டையில் இறங்காத குறையாக மோதலில் இறங்கியுள்ளன. சமீபத்தில் பிரபல பிரான்ஸ் பத்திரிகை ஒன்று frites என்று அழைக்கப்படும்.

சிப்பி வகை உணவுடன் வழங்கப்படும் உருளைக்கிழங்கு பொரியலான பிரெஞ்சு பிரையைக் கண்டுபிடித்தது பிரான்ஸ்தான் என்று செய்தி வெளியிட்டிருந்தது.

பிரெஞ்சு பிரை பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தது அல்ல என்று ஆகஸ்டு மாதம் 1 ஆம் திகதி Le Figaro என்னும் தினசரி செய்தி வெளியிட்டிருந்தது.

ஆகஸ்டு 1 சர்வதேச பெல்ஜியம் frites தினமாக கொண்டாடப்படும் நிலையில் அன்று அந்த செய்தியை வெளியிட்டது பலரின் கோபத்தைத் தூண்டியது.

இந்த frites முதன்முதலில் பாரீஸ் தெருக்களில் சினிமா பார்க்க செல்பவர்களுக்கு விற்கப்பட்டதாக பிரபல வரலாற்றியலாளரான Pierre Leclercq கூறி இருந்தார்.

1855இலேயே அதன் செய்முறை சமையல் புத்தகங்களில் கொடுக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் 17ஆம் நூற்றாண்டிலேயே பெல்ஜியத்தில் பிரெஞ்சு பிரை தயாரிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

முதல் உலகப்போரின்போது அமெரிக்க வீரர்களுக்கு விற்கப்பட்ட பெல்ஜியம் fritesகளை அவர்கள் தவறுதலாக பிரெஞ்சு பிரை என்று அழைத்ததாகவும் அந்த பெயரே நிலைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

பெல்ஜியம் நாட்டவர்களுக்கு நான் சொல்வது பிடிக்காதுதான், என்றாலும் இன்று பயன்படுத்தப்படும் பிரெஞ்சு பிரை பாரீஸைச் சேர்ந்ததுதான் என்கிறார் Leclercq. Frietkoten என்னும் பெல்ஜியம் frites தேசிய கூட்டமைப்பின் தலைவரான Bernard Lefèvre, பிரான்ஸ் நாட்டவர்கள் எப்போதுமே எங்களை குறைத்துதான் மதிப்பிடுவார்கள்.

ஒரு அசாதாரணமான பொருள் பிரான்சில் கண்டுபிடிக்கப்படவில்லையே என்ற எண்ணத்தால் ஏற்பட்ட அசௌகரியமான உணர்வு அவர்களுக்கு என்கிறார்.

பிரெஞ்சு பிரைக்கு பயன்படுத்தப்படும் உருளைக்கிழங்குகள் தென் ஜேர்மனி, நெதர்லாந்தின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் விளைகின்றனவே தவிர பாரீஸில் இல்லை.

பெல்ஜியம் frites கலாச்சாரம் கடந்த ஆண்டு UNESCO கலாச்சாரப் பொக்கிஷங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் பெல்ஜியத்தை உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் அரையிறுதிப் போட்டியில் தோற்கடித்ததிலிருந்து நாட்டுப் பற்றுடைய பல பெல்ஜியம் நாட்டவர்கள் எந்த விடயத்தில் பிரான்சைத் தாக்கலாம் என்னும் ஒரு வித வன்மத்துடனேயே அலைகிறார்கள் என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்