ஜேர்மனி இளைஞர்களை வசீகரித்த பெண் பொலிஸ் அதிகாரி எடுத்த முடிவு: ரசிகர்கள் கொண்டாட்டம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
411Shares
411Shares
ibctamil.com

ஜேர்மனியில் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பெண் பொலிசார் ஒருவர் அடுத்த ஆறு மாத காலம் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜேர்மனி இளைஞர்களை சமீப காலமாக வசீகரித்த பொலிஸ் அதிகாரி 33 வயதான Adrienne Koleszar.

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவருக்கு 500,000 ரசிகர்கள் உள்ளனர். பொலிஸ் துறையில் தினசரி அலுவல்களான குடும்ப பிரச்னையை தீர்த்து வைப்பது, இரவுப்பணி என தமக்கு களைப்பை ஏற்படுத்துவதாக குறும் Adrienne Koleszar அடுத்த ஆறு மாத காலம் விடுப்பு எடுத்துக் கொண்டு தமக்கு விருப்பமான நாடுகளுக்கு சென்று ஓய்வெடுக்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவின் பிளோரிடா மாகாணத்தில் ஓய்வை களித்துவரும் அவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் அனைத்தும் கிறங்கடிக்க வைப்பதாக இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரது புகைப்படங்களுக்கு கருத்து பதிவிடும் இளைஞர்கள், உங்கள் கைகளால் கைதாக வேண்டும், என்னை தயவு செய்து கைது செய்யுங்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

இதுவரை எந்த திட்டமிடலும் இல்லை எனவும், தமது குடும்பத்துடன் போதிய நேரம் செலவிடவும், வாழ்க்கையை மிகவும் தனித்துவமாக வாழவும் இந்த ஓய்வு நாட்களை பயன்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது மேலதிகாரிகளிடம் ஓராண்டுக்கு விடுப்பு கோரியதாகவும், ஆனால் 6 மாதம் மட்டுமே அனுமதித்துள்ளதாகவும் கூறும் பொலிஸ் அதிகாரி Koleszar, ஊதியமற்ற விடுப்பானது 6 மாதம் வரை மட்டுமே அனுமதிக்க முடியும் எனவும், உங்கள் சேவை காவல்துறைக்கு மேலும் தேவை என தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது புகைப்படங்கள் ஒருபோதும் நிர்வாணத்தை ஊக்குவிக்காது எனவும், ஆரோக்கியமான வாழ்க்கையை மட்டுமே ஊக்குவிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்