இரட்டை கோபுர சம்பவத்தில் ஈடுபட்ட நபரை நாடு கடத்திய ஜேர்மன்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
239Shares
239Shares
ibctamil.com

அமெரிக்காவின் இரட்டை கோபுர சம்பவத்தில் ஈடுபட்ட மொராக்கோ நாட்டை சேர்ந்த நபரை ஜேர்மன் அரசாங்கம் நாடுகடத்திய பின்னர், அவர் குறித்த தகவல்களை மொராக்கோ அரசாங்கம் தெரிவிக்கவில்லை.

மெராக்கோவை பிறப்பிடமாக கொண்ட Mounir el-Motassadeq என்ற நபர், செப்டம்பர் 11, 2001 இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவர் ஜேர்மனில் இருந்தபோது தீவிரவாத அமைப்பில் இருந்ததோடு மட்டுமல்லாமல் கொலை சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஜேர்மன் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட இவர், சுமார் 15 ஆண்டுகள் Hamburg சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இவர் மொராக்கோ நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டதாக மத்திய அரசு அலுவலகம் தெரிவித்தது.

ஆனால், இவர் மொராக்கோ நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டதையடுத்து மொராக்கோ நீதி மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் இதுகுறித்து எவ்வித பதிலும் அளிக்கவில்லை, மேலும் அவரது நிலை என்ன என்பது குறித்தும் தெரிவிக்கவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்