ஜேர்மனியை தாக்கிய திடீர் புயல்! பருவநிலை மாற்றத்தால் போக்குவரத்து சேவை பாதிப்பு

Report Print Kabilan in ஜேர்மனி
301Shares
301Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நீடித்த நிலையில், தற்போது புயல் தாக்கியுள்ளதால் விமான சேவை உட்பட பல போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜேர்மனியில் வெப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. ஆனால், நேற்று இரவு Nadine என்னும் புயல் தாக்கியது. இதனால் பலத்த இடியுடன் கூடிய மழைப்பொழிவு உண்டானது. அத்துடன் காற்று வேகமாக வீசியதால் சாலையோரம் இருந்த ஏராளமான மரங்கள் சாய்ந்தன.

இதில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த புயலினால் காற்றானது மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்துடன் வீசி வருகிறது. ஜேர்மனியின் முக்கிய நகரங்களான North Rhine Westphalia மற்றும் parts of Lower Saxony ஆகியவற்றில், மணிக்கு 110 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.

இதன் காரணமாக போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதே போல் Hanover-Hamburg-Kiel, Bremen-Hamburg மற்றும் Osnabruck-Lohne ஆகிய நகரங்களுக்கு செல்லும் தொலைதூர ரயில்களின் சேவையும் இன்று காலை பாதிக்கப்பட்டது.

மேலும், ஜேர்மனியின் மிகப்பெரிய விமான நிலையமான Frankfurt-யில் விமான சேவை பாதிக்கப்பட்டது. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பெர்லின் நகரில் நடைபெற்று வரும் ஐரோப்பா சாம்பியன்ஷிப் போட்டிகளின் நிகழ்ச்சியின் முடிவில், புயலின் காரணமாக பாதுகாப்பு கருதி, ஒலிம்பிக் மைதானத்திலேயே பார்வையாளர்கள் தங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.

Frankfurt நகர நெடுஞ்சாலைகளில் மரங்கள் சாய்ந்ததால், சாலை போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஹம்பர்க் மற்றும் மன்ஸ்டர்லாண்ட் நகரங்களில் மரங்கள் சாய்ந்ததில் பல படுகாயமுற்றனர்.

ஜேர்மனியில் கடுமையான வெப்பம் வீசிய நிலையில், தற்போது புயல் தாக்கியுள்ளது வானிலையில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்