ரஷ்ய ஜனாதிபதியை மீண்டும் சந்திக்கும் ஏஞ்சலா மெர்க்கல்: காரணம் இதுதான்

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியின் சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஜேர்மனி நாட்டின் சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல், தற்போதைய சர்வதேச பிரச்சனைகள் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இதில் சிரியாவில் நடக்கும் போர் , கிழக்கு உக்ரைனில் நடக்கும் வன்முறைகள் மற்றும் ஆற்றல் கொள்கை ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.

இந்த பேச்சுவார்த்தை ஜேர்மனியின் பெர்லின் நகரில் வரும் 18ஆம் திகதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்க்கல்- புதின் இருவரும் கடைசியாக மே மாதத்தில் சோச்சி நகரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

REUTERS

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்