ஒசாமா பின்லேடனின் மெய்க்காப்பாளரை ஜேர்மன் நாட்டில் வசிக்க அனுமதிக்க இயலாது: ஏஞ்சலா மெர்க்கல்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மெய்க்காப்பாளர் தொடர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பதற்கு அனுமதிக்க இயலாது என அந்நாட்டு சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

துனிசியா நாட்டை பிறப்பிடமாக கொண்ட Sami A என்ற நபர் ஒசாமா பின்லேடனின் மெய்க்காப்பாளராக இருந்தவர், இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஜேர்மன் நாட்டில் புகலிடக்கோரிக்கையாளராக வசித்து வருகிறார்.

அந்நாட்டில், தனக்கு குடியுரிமை கொடுக்கும்படி இவர் பலமுறை வலியுறுத்தியும் இவர் ஒரு தீவிரவாதி என்ற அடிப்பைடயில் குடியுரிமை மறுக்கப்பட்டது. மேலும், இவருக்கு 1,200 ப யூரோ மாததொகையாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இவரை கடந்த மாதம் நாடுகடத்த ஜேர்மன் அரசாங்கம் உத்தரவிட்டது. ஆனால், சொந்தநாட்டிற்கு தான் திரும்பி சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என இவர் தெரிவித்ததையடுத்து, அந்நாட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இவரை தொடர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பதற்கு அனுமதி வழங்க இயலாது, அவரை நாடுகடத்துவதற்கான அனுமதி மேற்கொள்ள வேண்டும், ஒரு தீவிரவாதி என்று தெரிந்தும் நாட்டில் வைத்திருப்பது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவக்கும் என கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers