இந்தியாவிலிருந்து ஜேர்மன் வரை: 89 வயதிலும் அசத்தும் பாட்டி

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

89 வயதிலும் பராம்பரிய கைப்பகைளை வடிவமைத்து கைத்தொழில் மூலம் அசத்திவருகிறார் லதிகா பாட்டி.

அசாம் மாநிலத்தில் பிறந்த லதிகா சக்கரவர்த்தி, தனது கணவர் உயிருடன் இருந்த காலத்தில் அவரது தொழில் காரணமாக பல்வேறு நாட்டில் பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளார்.

அதன் மூலம் பல கலாசாரங்களை கற்றுக்கொண்டார். தனது கணவரின் மறைவுக்கு பின்னர், பொழுதுபோக்கிற்காக தையல் தொழில் கற்றுக்கொண்டு, தனது பேரக்குழந்தைகளுக்கு சிறு பொம்மைகள் மற்றும் சிறு சிறு கைப்பைகள் தைத்துக்கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பாரம்பரிய கைப்பைகளை இவரே வடிவமைத்து உற்பத்தி செய்துள்ளார்.


அவரது கைவண்ணத்தில் செய்த பைகளை தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். இவரது கைப்பைகள் பிடித்துப்போன காரணத்தால், தாங்கள் வாங்கும் புதிய ஆடைக்கு ஏற்றவாறு கைப்பைகள் தைத்து கொடுக்குமாறு அதிகளவில் ஆர்டர்கள் இவரிடம் வந்தன.

தான் தயாரித்த கைப்பைகளை, ஜெர்மனியில் உள்ள தனது பேரனுக்கு படம் எடுத்து அனுப்பியுள்ளார். அதைக்கண்ட லதிகா பாட்டியின் பேரன் ஜாய் சக்ரவர்த்தி "லதிகா" ஸ் "பேக்ஸ்" என்ற இணையதளத்தை தொடங்கி அதில் தனது பாட்டி தயாரித்த கைப்பைகளை படம் பிடித்து பதிவேற்றம் செய்துள்ளார்.

அவற்றிற்கு ரூ.500 லிருந்து ரூ.1,500 வரை விலை நிர்ணயித்துள்ளார். அதில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. லதிகா பாட்டி தயாரித்த பைகளுக்கு, ஜேர்மன், நியூலாந்து மற்றும் ஓமனில் இருந்து ஆர்டர்கள் வந்துள்ளன. அந்நாடுகளுக்கு 400க்கும் மேற்பட்ட பைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்