பெற்றோர்கள் மொபைலில் மூழ்குவதால் ஜேர்மனியில் உயிரிழக்கும் குழந்தைகள்: அதிர்ச்சி தகவல்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

இந்த ஆண்டு மட்டும் 300 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலளிக்கும் ஜேர்மனியின் lifeguards என்னும் மீட்புக் குழுவினர், இத்தகைய மரணங்களில் பெரும்பாலானவை பெற்றோர்கள் மொபைலில் மூழ்குவதால் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகள் தண்ணீரில் மூழ்குவதற்கும் பெற்றோர்கள் மொபைலில் மூழ்குவதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் The German Lifeguard Association என்னும் அமைப்பினர்.

உங்கள் பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ தண்ணீருக்குள் விளையாடும்போது உங்கள் மொபைல்களை தூரமாக வைத்து விடுங்கள் என்னும் அறிவுரையை சில பெற்றோர்களே கவனிப்பதாக தெரிவிக்கிறார் அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர்.

கடந்த காலங்களில் பிள்ளைகள் தண்ணீரில் விளையாடும்போது அவர்களுடன் அவர்களது பெற்றோரும் தாத்தா பாட்டிமாரும் நேரம் செலவழிப்பார்கள், இப்போதெல்லாம் அவர்கள் தங்கள் மொபைல் போனிலேயே மூழ்கி விடுவதால் பிள்ளைகள் தனித்து விடப்படுகிறார்கள் என்கிறார் அவர்.

அது மட்டுமின்றி பள்ளிகளில் நீச்சல் கற்றுக் கொடுக்கப்படாததையும் குற்றம் சொல்கிறார்கள் இந்த அமைப்பினர்.

சமீபத்தில் மட்டும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களில் 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 20 பேர், 16 வயதுக்கும் 25 வயதுக்கும் இடையே உள்ளவர்கள் 40 பேர் என்னும் தகவல் உண்மையிலேயே அதிர்ச்சியளிப்பதாகத்தான் உள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...