அப்பா வயது நபரை திருமணம் செய்ய நினைப்பது ஏன்? அழகிய இளம்பெண் சொன்ன காரணம்

Report Print Raju Raju in ஜேர்மனி

ஜேர்மனியை சேர்ந்த 19 வயதான பெண் தனது தந்தை வயது நபரை தீவிரமாக காதலித்து வரும் நிலையில் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஜேர்மனியின் முண்டனை சேர்ந்தவர் செல்மா டின்மென் (19). இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் மைக் லீக் (52) என்பவரை தன்னுடன் பணிபுரியும் இடத்தில் சந்தித்துள்ளார்.

பின்னர் மைக், செல்மாவுக்கு பேஸ்புக்கில் நண்பராக ஏற்று கொள்ள கோரிக்கை வைத்த நிலையில் முதலில் செல்மா ஏற்கவில்லை.

ஆனால் பிறகு ஏற்று கொண்ட நிலையில் இருவரும் நட்பாகியுள்ளனர். நட்பானது பின்னர் மெல்ல காதலாக மாற தொடங்கியது.

இருவருக்கும் இடையில் 33 வயது வித்தியாசம் இருந்ததால் இவர்களின் காதலை செல்மா குடும்பத்தார் ஏற்று கொள்ளவில்லை.

இதையடுத்து சில மாதங்கள் மைக்கை பார்க்க முடியாமலும், அவருடன் பேச முடியாமலும் உள்ள நிலைக்கு செல்மா தள்ளப்பட்டார்.

இது குறித்து செல்மா கூறுகையில், முதலில் அவரை நான் புறக்கணிக்க தொடங்கினேன், பின்னர் அவரை எனக்கு பிடித்து போனது.

எங்களின் காதல் நாளுக்கு நாள் அதிகமானது, ஒரே மொழியை பேசுவது, நன்றாக ஓவியம் வரைவது போன்ற பல விடயங்களில் எனக்கும் மைக்குக்கும் ஒற்றுமை உள்ளது.

நான் தற்போது மைக்குடன் தான் வசிக்கிறேன், எங்கள் வயது வித்தியாசம் பற்றி கவலையில்லை. நானும் மைக்கும் மகிழ்ச்சியான உறவுமுறையில் உள்ளோம்.

விரைவில் இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை தொடங்குவது குறித்து யோசித்து கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்