மூளையில் பதிந்த குண்டு: கனடாவுக்கு சுற்றுலா சென்ற ஜேர்மானியருக்கு நேர்ந்த பரிதாபம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
173Shares
173Shares
lankasrimarket.com

கனடாவுக்கு சுற்றுலா சென்ற ஜேர்மானியர் ஒருவர் மீது 16 வயது இளைஞன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தாலும், அந்த குண்டு அவரது மூளையிலேயே தங்கி விட்டது.

கனடாவுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு குடும்பம் தங்கள் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர்களை முந்திச் சென்ற ஒரு காரிலிருந்த இளைஞன் ஒருவன் தனது துப்பாக்கியால் அந்த காரை ஓட்டியவரைக் குறிவைத்து சுட்டான்.

அவன் குண்டுமழை பொழிந்ததில் ஒரு குண்டு அந்த காரை ஓட்டிய 60 வயதுடைய சுற்றுலாப்பயணியின் தலையில் பாய, அவர் நிலை குலைந்ததால் அவரது கார் ஒரு மரத்தில் மோதி நின்றது.

ஜேர்மனிக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த நபருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரது மூளையிலிருந்த குண்டை அகற்றினர்.

அவர் உயிர் பிழைத்தாலும், அவர் நலம்பெற மிக நீண்ட காலம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த குண்டு எந்த துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக கனடா தடயவியல் துறைக்கு அது அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கனடா பொலிசார் 16 வயது இளைஞன் ஒருவனைக் கைது செய்துள்ளனர்.

அவன்மீது கொலைக் குற்றம் உட்பட 14 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்