குழந்தையுடன் வந்ததால் வெளியேற்றப்பட்ட பெண் எம்பி

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
189Shares
189Shares
lankasrimarket.com

ஜேர்மனில் பெண் பாராளுமன்ற எம்பி ஒருவர் பாராளுமன்ற கலந்தாய்வு நடைபெறும்போது தனது 6 வார குழந்தையை தூக்கிகொண்டு வந்த காரணத்தால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

Thuringia எம்பியாக இருக்கும் Madeleine Henfling என்பவர் தனது 6 வார குழந்தையை தூக்கிகொண்டு பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்தபோது, மாநில பாராளுமன்ற தலைவர் Christian Carius, குழந்தையை பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவதற்கு அனுமதி கிடையாது.

அதற்கு எவ்வித விதிமுறைகளும் இல்லாத காரணத்தால் குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல வேண்டும் என அவர் அறிவுறுத்தியதால், சிறிது நேரம் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு சுமார் 30 நிமிடங்கள் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின்னர் பெண் எம்பி வெளியேறியபின்னர், பாராளுமன்றம் தொடங்கப்பட்டது. தனது தாய் வீட்டில் இல்லாத காரணத்தால், குழந்தையை தன்னுடன் கொண்டு வந்ததாக கூறிய அவர், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு என்று தனி கட்டிடம் ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்