சட்ட விரோதமாக அகதிகளுக்கு உதவிய பிரபலத்தின் சகோதரி கைது

Report Print Balamanuvelan in ஜேர்மனி

2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற சிரிய அகதியின் சகோதரி ஒருவர் சட்ட விரோதமாக அகதிகள் நாட்டுக்குள் நுழைய உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Sarah Mardini (23) மற்றும் அவரது சகோதரி Yusra இருவரும் சிரிய போருக்கு தப்பி 2015ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்கு வந்தவர்கள்.

அவர்கள் இருவரும் அந்த நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட அகதிகள் இருந்த ஒரு உடைந்த படகை கிரீஸ் கடற்கரைக்கு இழுத்து வந்து அவர்களை மீட்டனர்.

Sarah ஒரு தன்னார்வலராக Lesbos தீவில் தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கும்போது கிரீசைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த ஒருவருடன் அவர் கைது செய்யப்பட்டார்.

அகதிகளுக்கு சட்ட விரோத உதவிகள் செய்ததாக கைது செய்யப்பட்ட Sarah, ஏதென்சுக்கு வெளியே உள்ள ஒரு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு சகோதரிகளும் 2015ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் டமாஸ்கசிலுள்ள தங்கள் வீட்டை விட்டு விட்டு சுமார் 1000 மைல்கள் பயணித்து ஜேர்மனியை வந்தடைந்தனர்.

அவர்கள் பெர்லினில் குடியமர்ந்த நிலையில், Sarah கல்வி கற்கப்போக, அவரது சகோதரி Yusra அகதிகள் அணி சார்பாக 2016இல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றார்.

பின்னர் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஏஜன்சியின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers