ஜேர்மன் நபரை கொன்ற அகதிகள்: ஏஞ்சலா மெர்க்கலின் குடியேற்ற கொள்கைக்கு எதிராக வெடித்த போராட்டம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

கடந்த வாரம் ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த இரு அகதிகள் ஜேர்மனியில் தச்சு வேலை செய்து வந்த ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

அகதிகளின் இந்த செயல் ஜேர்மன் புலம்பெயர் எதிர்ப்பாளர்கள் மற்றும் வலது சாரியினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதையடுத்து, ஜேர்மன் நாட்டுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை குறைப்பதோடு மட்டுமல்லாமல் குடியேற்ற கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டில் இருந்து அகதிகளுக்கு சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கல் ஆதரவு அளித்து வருகிறார் என குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று, Chemnitz சாலையில் சுமார் 6,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏஞ்சலா மெர்க்கலின் குடியேற்ற கொள்கையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீவிர வலது சாரி மற்றும் இடது சாரி கட்சியினர் தூண்டுதலின் பேரில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த சுமார் 1,200 பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers