ஜேர்மனியில் திருவிழாவிற்கு வந்தவர்களை திடீரென தாக்கிய தேனீக்கள் கூட்டம்: 13 பேர் மருத்துவமனையில் அனுமதி

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியில் சமூக விழா ஒன்றிற்கு வந்த நபர்களை தேனீக்கள் கொட்டியதில், 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜேர்மனியின் Baden-Wurttemberg-யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக விழா ஒன்று நடைபெற்றது. அதில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், உணவு பரிமாறும் இடத்திற்கு அருகில் இருக்கும் திராட்சை தோட்டத்தில் இருந்து ஏராளமான தேனீக்கள், திடீரென விழாவிற்கு வந்திருந்தவர்களை கொட்டத் தொடங்கின.

இதில் 18 பேர் காயமடைந்தனர். அவர்களில் 13 பேர் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வாகனம் இரண்டு உதவியாளர்களுடன் நிறுத்தப்பட்டது.

அத்துடன் சில அவசர பிரிவு சேவைகள் மற்றும் 10 வாகனங்கள் கிராமங்களைச் சுற்றி நிறுத்தி வைக்கப்பட்டன. குறித்த சமூக விழாவும் நிறுத்தப்பட்டது.

மேலும், பூச்சிகள் நிபுணர் ஒருவர் வரவழைக்கப்பட்டார். இந்த தேனீக்களின் தாக்குதலில் எவருக்கும் ஆபத்தான சூழல் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers