ஜேர்மனில் போலி துப்பாக்கி வைத்திருந்த இளைஞர் கைது

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனின் Ludwigshafen நகரில் போலி துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டது ஒரு நகைச்சுவையாக கருதப்பட்டாலும் கைது செய்யப்பட்ட 19 வயது இளைஞர் ஆயுதக்கட்டுப்பாடு நடவடிக்கைகளை மீறியதாக விசாரணக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நகரில் உள்ள குடியிருப்பில் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக அப்பகுதி வாசிகள் பொலிசில் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, ஆயுதம்தடுப்பு பொலிசார் அந்த குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் 19 வயது இளைஞர் ஒருவரிடம் இருந்து போலி துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.

இது ஒரு நகைச்சுவையான சோதனையாக கருதப்பட்டாலும், அந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் ஆயுதக்கட்டுப்பாடு பிரிவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers