வெளிநாட்டவர்களை காதலிக்கும் ஜேர்மானியர்கள்: ஒரு வித்தியாசமான ஆய்வு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

கடந்த இருபது ஆண்டுகளில் வெளிநாட்டவர்களை காதலிக்கும் ஜேர்மானியர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

2017ஆம் ஆண்டு ஜேர்மானியரல்லாதவரோடு சேர்ந்து வாழும் ஜேர்மானியர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனாக இருந்தது, இவர்களில் 1.2மில்லியன் பேர் மணமானவர்கள்.

நேற்று வெளியிடப்பட்ட ஃபெடரல் புள்ளியியல் அலுவலக அறிக்கை ஒன்றின்படி ஏழு சதவிகித தம்பதியரில் ஒருவர் ஜேர்மானியர், அவரது துணைவர் ஜேர்மானியரல்லாதவர்.

எட்டு சதவிகிதத்தினர் தம்பதியரில் இருவருமே இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் (1.7 மில்லியன் தம்பதிகள்).

ஜேர்மனியின் 21 மில்லியன் தம்பதிகளில் 85 சதவிகிதத்தினர் இருவருமே ஜேர்மனியைச் சேர்ந்தவர்கள்.

புள்ளிவிவரப்படி நான்கு சதவிகிதம் ஜேர்மன் ஆண்களும் பெண்களும் வெளிநாட்டைச் சேர்ந்த துணையைக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய ஜேர்மன் ஆண்களின் மனைவிகள் பெரும்பாலும் துருக்கி (14 சதவிகிதம்), போலந்து (9 சதவிகிதம்) மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் (8 சதவிகிதம்).

ஜேர்மானிய பெண்களை மணக்கும் ஆண்களும் அதிகமாக துருக்கி (19 சதவிகிதம்).

இத்தாலி (12 சதவிகிதம்) மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர்கள் (ஏழு சதவிகிதம்).

இந்த எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

1996இல் ஜேர்மனியில் வெளிநாட்டவரை மணக்கும் ஜேர்மானியர்களின் எண்ணிக்கை வெறும் இரண்டு சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers