ஜேர்மனியின் தெருக்கள் ஒன்றும் தங்கத்தால் ஆனவை அல்ல: சொல்வது சாதாரண ஆளில்லை

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஆப்கானியர்கள் ஜேர்மனியை பாலும் தேனும் ஓடும் நாடு என தவறாக நம்பி விடக் கூடாது, ஜேர்மன் தெருக்கள் ஒன்றும் தங்கத்தாலானவை அல்ல என ஆப்கன் அதிபர் Ashraf Ghani, ஜேர்மனியை நோக்கி ஓடும் தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அது மட்டுமின்றி ஆப்கன் புகலிடம் கோருவோருக்கு ஜேர்மனியில் புகலிடம் கிடைத்தாலும்கூட அங்கு அவர்களுக்கு உடலை வருத்தி செய்யும் வேலைகள் மட்டுமே கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்தகைய வேலைகளைத் தாம் குறைவாக எடை போடவில்லை என்றும் ஆப்கனின் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடையவர்களும்கூட ஜேர்மனியில் எடுபிடி வேலைகள் செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளாக நேரிடும் என்று அவர் தெரிவித்தார்.

ஆப்கன் உட்பட பிற நாட்டைச் சேர்ந்தவர்களால் ஜேர்மானியர்களோடு ஒன்றிணைந்து வாழ்வது கடினம் என ஜேர்மனியில் கருதப்படுவது குறித்து கேட்டபோது, ஒன்றிரண்டு பேருக்காக ஒரு நாட்டையே குற்றம் சொல்லக்கூடாது என்று கூறிய அவர் ஒரு நபர் குற்றம் செய்யும் அதே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்களால் நாட்டுக்கு நன்மை ஏற்படுகிறது என்பதை மறுக்க முடியாது என்றார் அவர்.

சமீபத்தில் ஒரு ஆப்கன் அகதி ஜேர்மனியில் தனது முன்னாள் காதலியைக் கொலை செய்ததற்காக தண்டிக்கப்பட்டதையும் இதனால் அதிக அகதிகள் நாட்டுக்குள் இருப்பதையும், அவர்களால் ஜேர்மானியர்களோடு ஒன்றிணைந்து வாழ இயலாததையும் கண்டித்து நாடு முழுவதும் எதிர்ப்புப் பேரணிகள் வெடித்ததையும் மறக்க முடியாது.

இதற்கிடையில், 2018ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 6100 ஆப்கானியர்கள் ஜேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

இதில் இன்னொரு விடயம் என்னவென்றால், விண்ணப்பிக்கும் ஆப்கானியர்களில் சுமார் 35 சதவிகிதம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விடுகின்றன.

அதே நேரத்தில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்படும் ஆப்கானியர்களை நாடு கடத்தும் ஒரு சர்ச்சைக்குரிய செயல்முறையும் ஜேர்மனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers