ஜேர்மனி இளைஞர் கொலை: பொலிசில் சிக்கிய ஆப்கான் அகதிகள் இருவர்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
237Shares
237Shares
lankasrimarket.com

கிழக்கு ஜேர்மனியில் இளைஞர் ஒருவர் கொலை வழக்கு தொடர்பில் ஆப்கான் அகதிகள் இருவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கிழக்கு ஜேர்மனியில் அமைந்துள்ள Köthen நகரில் இளைஞர் கொலை வழக்கு தொடர்பில் சனிக்கிழமை இரவு இந்த கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட ஜேர்மன் இளைஞருக்கு 22 வயது இருக்கும் எனவும், கொலைக்கான காரணம் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் உண்மையை வெளிக் கொண்டு வருவோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ஜேர்மன் இளைஞர் மற்றும் அவரது நண்பருடன் கைதான ஆப்கான் அகதிகள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கொலையில் முடிந்துள்ளது என உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தலையில் மோசமாக தாக்கப்பட்டதாலையே குறித்த ஜேர்மன் இளைஞர் மரணமடைந்திருக்கலாம் எனவும் அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்