ஜேர்மனில் 500,000 யூரோ மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த திருடர்கள்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனியில் பெயரி கடை ஒன்றுக்குள் புகுந்த திருடர்கள் €500,000 யூரோ மதிப்பிலான பொருட்களை 2 நிமிடத்தில் திருடி சென்றுள்ளனர்.

Sylt தீவு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வரும் இடமாகும். இங்குள்ள பெரிய கடை ஒன்றுக்குள் காலை 3:14 மணிக்கு கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், விலைமதிப்புமிக்க ஆடைகள் மற்றும் நகைகளை திருடி சென்றுள்ளனர்.

இவர்கள் திருடி சென்ற பொருட்களின் மதிப்பு €500,000 யூரோ ஆகும். கறுப்பு நிற ஆடை அணிந்து, முகமூடி அணிந்துகொண்டு காரில் வந்து திருடி சென்றுள்ளனர்.

தற்போது, இந்த திருடர்களை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers