வசிப்பதற்கு இடம் இல்லை: ஜேர்மனில் இருக்கும் சவால்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனின் Cologne மற்றும் Bonn ஆகிய நகரங்களில் வீடு வாடகைக்கு எடுப்பது என்பது மிகவும் சவாலாக உள்ளது என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு குடியிருப்பை கண்டுபிடிப்பது சிறிய அளவில் பணம் சம்பாதிப்பவர்களுக்கு சற்று கடினமாக இருந்தாலும் பண வசதியில் பின்தங்கி இருப்பவர்களுக்கு இது கடினமாக உள்ளது.

இது ஒரு ஆபத்தான வளர்ச்சி மட்டுமல்லாமல் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு தங்கும் இடங்களை ஒழுங்குபடுத்திக்கொடுக்கும் பணியினை செய்யும் Michiko Park என்பவர் கூறியதாவது, தற்போதைய காலகட்டத்தில் மலிவு விலை வீடுகளை கண்டுபிடிப்பது என்பது சவாலாக இருக்கிறது. அதுவும் குடியிருப்பதற்கு வீடு தேடி செல்லும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு 5 குடியிருப்புவாசிகளால் நிராகரிக்கப்படுகிறார்கள்.

எட்டு தாய்மார்கள் மற்றும் 12 குழந்தைகள் ஒரே இடத்தில் வசிக்கிறார்கள், இவர்களில் பெரும்பாலனோர் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers