ஜேர்மனில் கோலாகலமாக தொடங்கிய பாரம்பரிய பீர் திருவிழா

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் Oktoberfest என்ற பிரபலமான திருவிழா கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு வாரத்தில் 6 மில்லியன் பேர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக முனிச் மேயர் Dieter Reiter தெரிவித்துள்ளார்.

185வது பீர் திருவிழாவான Oktoberfest முதலில் Bavarian நகரில் தொடங்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாவதாக முனிச் நகரில் தொடங்கப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் கலந்துகொண்ட மேயர், முதல் ஆளாக பீர் குடித்து இந்த விழாவை தொடங்கிவைத்தார்.

ஒரு லிட்டர் பீரின் விலை €11.50 யூரோ ஆகும். அடுத்த இரண்டு வாரங்களில் உலகம் முழுவதும் இருந்து 6 மில்லியன் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்