ஒன்பது மாதக் குழந்தையை வீசியெறிந்து கொன்ற ஜேர்மானியர்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
153Shares
153Shares
ibctamil.com

ஜேர்மனியில் 23 வயதுள்ள ஒரு நபர் தனது ஒன்பது மாதக் குழந்தையை வீசியெறிந்து கொன்று விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெர்லினின் கிழக்கு மாகாணமான Friedrichsfelde பகுதியில் அந்த நபர் தனது மகனை ஏழாவது மாடியிலிருந்து வீசி எறிந்ததில் குழந்தை இறந்துபோனது.

பின்னர் தானும் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் அவர். அவ்வழியே சென்றவர்கள் இரண்டு உடல்கள் கிடப்பதைக் கண்டு பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட அந்த நபர் மன நலம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அந்த குழந்தையின் தாய் சம்பவம் நடந்தபோது அங்கு இல்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

அந்தப் பெண்ணுக்கு மன நல ஆலோசகர்கள் கவுன்சிலிங் கொடுத்து வருகின்றார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்