3 நாட்களாக பனிப்புயலில் சிக்கி தவித்த ஜேர்மானிய ஜோடி: காப்பாற்ற போராடிய விமானப்படை

Report Print Vijay Amburore in ஜேர்மனி

இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேசத்தில் ட்ரெக்கிங் சென்ற ஜேர்மானிய தம்பதியினர் 3 நாட்களாக பனிப்புயலில் சிக்கி தவித்துள்ளனர்.

ஜேர்மனியை சேர்ந்த மைக்கேல்- அனெட்டே தம்பதியினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள Lahaul-Spiti மாவட்ட பகுதியில் ட்ரெக்கிங் சென்ற இவர்கள் திடீரென ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் அங்கேயே கூடாரம் அமைத்து தங்க ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் நேரம் ஆக ஆக பனிப்பொழிவு பனிப்புயலாக மாறியுள்ளது. இதனால் அங்கு 2 நாட்களாக சிக்கி தவித்த இருவரும் வெளியேறும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இதனைதொடர்ந்து இருவரும் சிக்கியிருப்பதை பற்றி, மைக்கேல் பிராந்திய மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனே இந்த தகவல் இந்திய விமான படைக்கு சென்றடைந்தது.

ஆனால் காலநிலை சரியில்லாத காரணத்தால் விமானத்தை செலுத்த முடியாமல் அதிகாரிகள் காத்திருந்துள்ளனர்.

அதன் பின்னர் அடுத்த நாள் காலை 6 மணிக்கு காலநிலை ஓரளவு சீரானதும் 2 ஹெலிகாப்டர்களில் சென்று தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.

அப்பொழுது சிறிய அளவிலான கூடாரத்தினை பார்த்துள்ளனர். உள்ளிருந்து ஒருவர் வெளியில் வந்து சைகை கொடுத்ததும், கீழிறங்கி அவர்களை பத்திரமாக மீட்டனர்.

தற்போது இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers