நான்கு வயது சிறுவனுக்காக செய்யப்பட்ட நெகிழ்ச்சி செயல்: குவியும் பாரட்டுகள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பார்க்கிங் பிரச்சினை அதிகம் உள்ள ஜேர்மனியில் சிறுவனுக்காக தனியாக ஒரு பார்க்கிங் ஏரியா ஒதுக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பாராட்டுகளை குவித்து வருகிறது.

ஜேர்மனி என்றாலே பார்க்கிங் பிரச்சினை அதிகம் உள்ள பகுதி என்பது தெரிந்த விடயம்தான்.

Christie Dietz என்னும் உணவு மற்றும் பயணக் கட்டுரைகள் எழுதும் பெண்ணின் நான்கு வயது மகன் தனது சைக்கிளை வழக்கமாக ஒரு மின் விளக்குக் கம்பத்துடன் சேர்த்து பூட்டி விட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் இதை நீண்ட காலமாக கவனித்து வந்துள்ள இரக்க குணம் படைத்த ஒரு நபர், அந்த மின் விளக்குக் கம்பத்தில் அது அவனுக்கான பார்க்கிங் இடம் என்று காட்டும் வகையில் அந்த சிறுவனின் சைக்கிளின் புகைப்படத்தை ஒட்டி வைத்துள்ளார்.

அதை புகைப்படம் எடுத்த Christie, அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, இத்தகைய அன்பான மற்றும் இனிமையான செயல் எங்களை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த மின் விளக்குக் கம்பத்தில் ஒட்டப்பட்ட புகைப்படம் என் மகனை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது என்றும் அவர் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த ட்வீட் பலரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

சிலர் இந்த சம்பவம் கண்களில் கண்ணீரை வரவழைத்ததாக குறிப்பிட்டிருந்தார்கள்.

இது மிகவும் பாராட்டத்தக்க இரக்கம் மிகுந்த செயல் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் தன் மகனுக்காக ஒரு பார்க்கிங் ஏரியாவை ஒதுக்கிய நபருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அதே இடத்தில் ஒரு நன்றிக் குறிப்பை ஒட்ட இருப்பதாக Christie தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers