ஜேர்மனில் இருந்து நாடு கடத்தப்படும் துனிசியா நபர்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
203Shares
203Shares
ibctamil.com

ஜேர்மனில் வசித்து வரும் துனிசியா பயங்கரவாதியை நாடுகடத்தலை ஐரோப்பிய நீதிமன்றம் ஆதரித்துள்ளது.

2015 ம் ஆண்டு துனிசியாவில் நடந்த தாக்குதலில் 20 பயணிகள் இறந்த சம்பவத்தில் தொடர்புடைய Haikel S. என்ற நபர் ஜேர்மன் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இவரை தங்கள் நாட்டில் ஒப்படைக்க வேண்டும் என துனிசியா தெரிவித்துள்ளது. ஜேர்மனியில் இருந்து நாடு கடத்தப்பட்டதற்கு எதிராக மனு செய்தார். தான் நாடுகடத்தப்பட்டால் தனது சொந்த நாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளார்.

மனித உரிமையை ஐரோப்பிய நீதிமன்றம் மீறிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் (ECHR) இவரது வேண்டுகோளை நிராகரித்தது.

1991 ஆம் ஆண்டிடில் இருந்து துனிசியா உண்மையில் எந்த மரண தண்டனையையும் நடத்தவில்லை ஐரோப்பிய நீதிமன்றம் தெரிவித்து இவரை நாடுகடத்த உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்