வெப்ப காற்று பலூன் விபத்தில் சிக்கிய பயணிகள்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனின் Bottrop நகரில் வெப்ப காற்று பலூனில் பயணம் செய்த 6 பேர் விபத்தில் சிக்கியதையடுத்து மீட்கப்பட்டுள்ளனர்.

சுமார் 6 பேர் வெப்ப காற்று பலூனில் பயணம் செய்துள்ளனர், இவர்கள் பயணம் செய்த 6 மணிநேரத்திற்கு பிறகு 230 அடி உயரத்தில் இருந்த மின்சார லைனில் சிக்கியுள்ளது.

இதனைத்தொடர்ந்து மீட்பு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மின்சார லைனில் மோதியதன் காரணமாக தற்காலிகமாக பாதிக்கப்பட்ட பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பயணிகள் பாதுகாப்புக்கு கீழே ஒரு கயிறு வைக்கப்பட்டு பயணிகள் காப்பாற்றப்பட்டனர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers