மது தயாரிக்க ஏற்றுமதி செய்யப்படும் திராட்சை தோட்டத்தில் இருந்து 8,000 யூரோ மதிப்பிலான திராட்சை திருட்டு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனின் Hassloch நகரில் அமைந்துள்ள திராட்சை தோட்டத்திற்குள் புகுந்த திருடர்கள் சுமார் 8,000 யூரோ மதிப்பிலான திராட்சையை திருடி சென்றுள்ளனர்.

சுமார் 2 மணி நேரம் மெஷினை வைத்து திராட்சையை அறுவடை செய்துள்ளனர். 1,600 கிலோ எடை ஆகும். ஜேர்மனில் மொத்தம் 13 மாநிலங்களில் மது உற்பத்திகள் செய்யப்படுகின்றன.

அதிலும், தற்போது திருடு போன இடமும் மது தயாரிப்பதற்கு தேவையான திராட்சையை உற்பத்தி செய்கின்றன என்பதால் இது பிரபலமான இடமாகும்.

இந்த இடத்தில் இருந்து சுமார் 90 சதவீதம் வரை மது தயாரிப்பிற்கு திராட்சை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers