ஏஞ்சலா மெர்க்கலுக்கு தொழில்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் கப்பற்படையில் போர்க்கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே கடற்படைவசம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டிய பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போர்க்கப்பல் ஒன்று தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இன்னும் தயாராகாதது ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலை தர்மசங்கடத்துக்குள்ளாக்கியுள்ளது.

சோதனை ஓட்டத்தின்போது தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவற்றை சரி செய்வதற்காக அந்த கப்பலின் அதிகாரப்பூர்வ இயக்கம் இன்னும் ஓராண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த பீரங்கி, விமான எதிர்ப்பு மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், அகச்சிவப்பு தொழில்நுட்பம், சக்திவாய்ந்த ராடார் போன்ற வசதிகள் கொண்ட frigate class 125 என்னும் அந்த கப்பலின் விலை 2 பில்லியன் யூரோக்கள் ஆகும்.

ஆனால் அதன் தயாரிப்பு தொடர்ந்து தாமதமாவதால், அது தயாராகும் நேரத்தில் அதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் பழமையாகியிருக்கும்.

கப்பல் உற்பத்திக்கு பேர் போன ஜேர்மனி கப்பற்படைக்கு போதுமான போர்க்கப்பல்களை தயாரிக்கத் தவறிவிட்டது.

ஜேர்மன் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் கமிட்டியின் தலைவரான Hans-Peter Bartels, விமானம் தாங்கிக் கப்பல்களின் எண்ணிக்கை கடற்படையில் குறைந்து கொண்டே வருவதாகத் தெரிவித்துள்ள நிலையில், கப்பல் கட்டும் நிறுவனமான Thyssenkrupp, Frigate class 125 புதிய வடிவமைப்பு கொண்டது, அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் பல கொண்டது, இத்தனை பெரிய ஒரு தயாரிப்பின்போது எவ்வளவு காலதாமதம் ஏற்படும் என்பதை முன்கூடியே தீர்மானிக்க முடியாது என்று கூறியுள்ளது.

Frigate class 125இல் பல தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ளன. சமீபத்தில் அதன் மையக் கணினி அமைப்பு முக்கியமான பல தரக்கட்டுப்பாட்டுச் சோதனைகளில் வெற்றிபெறவில்லை.

பிரச்சினைகளைக் கண்டறிவதற்காக அது மீண்டும் துறைமுகத்திற்கே திரும்பியது; இதுவரை எந்த போர்க்கப்பலும் தயாரிக்கப்பட்டபின் துறைமுகத்துக்குத் திரும்பியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஜேர்மன் ஊடகங்கள், Frigate class 125இல் பல முக்கிய மென்பொருள் மற்றும் வன்பொருள் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதனால் அந்த கப்பல் பயன்பாட்டுக்கே தகுதியற்றது என்றும் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers