ஜேர்மனின் பாரம்பரிய திருவிழாவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
195Shares
195Shares
ibctamil.com

பாரம்பரிய திருவிழாவான அக்டோபர் பீஸ்ட் (Oktoberfest) விழவால் முனிச் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இது, 185-வது அக்டோபர் பீஸ்ட் திருவிழாவாகும்.

செப்டம்பர் 22 ஆம் திகதி தொடங்கப்பட்ட இந்த விழா அக்டோபர் 7 ஆம் திகதி நிறைவடைகிறது.

இங்கு செல்லும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் நடப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதுவரை 25 பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

21 வயதான பின்லாந்து பெண்ணை 25 வயதான நபர் பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டில், மொத்தம் 67 பாலியல் வழக்குகள் உள்ளன. 2016 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள 34 வழக்குகளில் இருந்து இது அதிகமாக உள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்