பெண்களை உடல்ரீதியாக துன்புறுத்திய தம்பதியினருக்கு 13 ஆண்டுகள் சிறை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
213Shares
213Shares
ibctamil.com

ஜேர்மனில் இரண்டு பெண்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய தம்பதியினருக்கு 2 ஆண்டுகள் கழித்து சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Höxter நகரில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, Wilfried என்பவரும் இவரது மனைவி Angelika ஆகிய இருவரும் சேர்ந்து ஒதுக்குப்புறமான வீட்டில் இரண்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர்.

இரண்டு பெண்களையும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். இதில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் இப்பெண் கொடுமைப்படுத்தப்பட்டது தெரியவந்ததையடுத்து பொலிசார் விசாரணை நடத்தியதில் இந்த தம்பதியினர் பற்றிய உண்மை தெரியவந்தது.

மேலும், மற்றொரு பெண்ணை துன்புறுத்தி உடலை வெட்டி எரித்துள்ளனர் என தெரியவந்தது. இதுதொடர்பாக இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இதில், கணவனுக்கு 13 ஆண்டுகள் மற்றும் மனைவிக்கு 11 ஆண்டுகுள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்