இப்படி ஒரு தம்பதியைப்பற்றி நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாது: ஜேர்மனியின் கொடூர கொலைகாரத் தம்பதி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியின் Höxter பகுதிக்கு அருகில் வசிக்கும் ஒரு தம்பதியினர் பெண்களை தங்கள் வீட்டுக்கு வரவழைத்து சித்திரவதை செய்து கொலை செய்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் இருவருக்கும் நேற்று நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Höxter பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வசித்துவந்த Angelika Wagener (49) மற்றும் அவளது முன்னாள் கணவனான Wilfried Wagener (48) இருவரும் செய்தித்தாளில் ’மணப்பெண் தேவை’ என்று விளம்பரம் செய்தார்கள்.

விளம்பரத்தைப் பார்த்த ஒரு பெண் Wilfried Wagener மீது காதலில் விழுந்தாள். வீடு தேடி வந்த அவளை அவன் கைவிலங்கிட்டு பன்றிக் கொட்டகையில் அடைத்தான்.

இப்படியே பல பெண்களை ஏமாற்றி வீட்டுக்கு கொண்டு வருவார்கள் இருவரும். புது வாழ்வு கிடைக்கும் என்று நம்பி வந்த பெண்களை இருவரும் சேர்ந்து அடித்தார்கள், கழுத்தை நெரித்தார்கள், பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடு வைத்தார்கள், தீ வைத்துக் கொளுத்தினார்கள், சுடு தண்ணீரை ஊற்றினார்கள், முடியைப் பிய்த்தார்கள், ஷாக் கொடுத்தும் பெப்பர் ஸ்பிரே அடித்தும் சித்திரவதை செய்தார்கள்.

அப்படி சித்திரவதைக்குள்ளான ஒரு பெண்ணை அவளது வீட்டில் கொண்டு தள்ளிவிடச் செல்லும்போது, எதிர்பாராதவிதமாக அவளது நிலைமை மோசமாகவே, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். இந்நிலையில் அவளது உடலில் இருந்த காயங்களைக் கண்ட மருத்துவர்கள் சந்தேகமடைந்து பொலிசாருக்கு தகவல் அளித்தார்கள்.

இதேபோல் திருமணம் செய்யலாம் என எண்ணி வந்த இன்னொரு பெண்ணும் உயிரிழக்க, அந்த கொடூர தம்பதி அவளது உடலை அரத்தால் துண்டு துண்டாக அறுத்து, பின்னர் எரித்து, அந்த சாம்பலை தெருக்களில் தூவினார்கள்.

பொலிசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று Angelika Wagenerக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பைக் கேட்டதும் புன்னகைத்த அவள் தனது வழக்கறிஞரைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.

Wilfried Wagenerக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவன் மன நல மருத்துவமனையில் அடைக்கப்பட்டுள்ளான்.

அந்த தம்பதியினரால் பாதிக்கப்பட்டுள்ள பல பெண்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதோடு, அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட தகவல் கிடைத்தாலன்றி வாய் திறக்கமாட்டோம் என்று கூறிவிட்டார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers