அம்பலமாகியுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முன்வரவேண்டும்! திருச்சபைத் தலைவர் அழைப்பு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
177Shares
177Shares
ibctamil.com

ஜேர்மனின் கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் கார்டினல் ரெய்ன்ஹார்ட் மார்க்ஸ் மத குருமார்களுக்கான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்காக பிரம்மாண்டமான விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பலவீனமான சாக்குகள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என கார்டினல் ரெய்ன்ஹார்ட் மார்க்ஸ் கூறியுள்ளார்.

கத்தோலிக்க தேவாலயங்களில் நடைபெறும் ஓரினச்சேர்க்கை சம்பவங்கள் மற்றும் மதகுருக்கள் மீது இதுவரை சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளை விவாதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

நாங்கள் தேவாலயத்தில் வேலை பார்ப்பதால், நாங்கள் கண்டிப்பாக தலையிட வேண்டும். இதுகுறித்து அரசு விசாரிக்கும் என எதிர்பார்த்து காத்திருக்ககூடாது.

கத்தோலிக்க திருச்சபை சம்பந்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சமீபத்திய ஆண்டுகளில் ஜேர்மனியில் நடந்தவை உட்பட உலகெங்கிலும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

. 1946 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் குறைந்தபட்சம் 1,670 கத்தோலிக்க மதகுருமார்கள் 3,600 க்கும் அதிகமான பிள்ளைகள் மற்றும் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அறிக்கை வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்