ஜேர்மனில் குடியேற்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்: பொலிசாருக்கு தீவிர காயம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் குடியேற்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று Apolda நகரத்தில் சுமார் 800 பேர் சேர்ந்து குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது வெளிநாட்டினருக்கு எதிராக போராடுவோம் என்ற கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இந்த போராட்டத்தை தடுக்க சென்ற பொலிசார் மீது பாட்டில்கள் மற்றும் மிளகு ஸ்பிரேக்களை அடித்ததில் தீவிர காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில், 22 பொலிசார் பாதிக்கப்பட்டுள்ளனர். 2015 ல் இருந்து ஒரு லட்சம் தஞ்சம் கோருவோர் வருகை மூலம் ஜேர்மனி அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய வருகைக்கு எதிராக தீவிர வலது மற்றும் தீவிர தேசியவாத குழுக்கள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளனர்,

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers