ஜேர்மனியில் புகலிடம் தேடி வந்தவருக்கு நோபல் பரிசு: ஏஞ்சலா மெர்க்கல் பாராட்டு

Report Print Balamanuvelan in ஜேர்மனி
312Shares
312Shares
ibctamil.com

ஜேர்மனியில் புகலிடம் தேடி வந்தவருக்கு நோபல் பரிசு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாக ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்புணர்வுக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலர்களான Nadia Murad மற்றும் Denis Mukwege ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நோபல் பரிசு வென்ற இருவருக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிப்பதாக ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் அரசின் செய்தி தொடர்பாளரான Steffen Seibert, நோபல் பரிசு பெற்ற இருவரின் பணியையும் ஃபெடரல் அரசு பெருமளவில் மதிப்பதாக தெரிவித்தார்.

கற்பனை கூட செய்ய இயலாத கொடுமைகளை மற்றவர்களுக்கு செய்து வரும் மக்கள் நடுவில் மனித சமுதாயத்திற்காக இந்த இருவரும் குரல் கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.

Nadiaவுக்கு புகலிடம் அளித்த பகுதியான Baden-Württembergஇன் பிரதமரான Winfried Kretschmann, நோபல் பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, தங்கள் நாட்டிற்கு வந்த Nadia என்னும் வலிமை மிக்க இளம்பெண், தன்னை ஒரு தீவிரவாதக் குழுவால் பாதிக்கப்பட்டவராக இல்லாமல் தைரியமும் கண்ணியமும் மிக்க ஒரு பெண்ணாக காட்டிக் கொள்ள விரும்புகிறார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் 2016ஆம் ஆண்டு, டிசம்பர் 1ஆம் திகதி Baden-Württemberg நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை அனைவரையும் அசைத்தது.

நாம் நமது நாட்டில் தொடர்ந்து Nadia Muradக்கு ஒரு வீட்டை அளித்து, அவரை பாதுகாக்கவும் செய்வதோடு, ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு தூதுவராக அவர் எடுக்கும் நடவடிக்கைகளில் அவருக்கு ஆதரவும் அளிப்போம் என்றும் Winfried Kretschmann தெரிவித்தார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்