பல்கேரியா பத்திரிகையாளர் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
28Shares
28Shares
ibctamil.com

கொடூரமாக பாலியல் வண்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பல்கேரிய பத்திரிகையாளர் கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக அவர் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை என உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கும் நிலையில் பல்கேரியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கேரிய பத்திரிகையாளரான Viktoria Marinova (30)வின் அடித்து சிதைக்கப்பட்ட உடல் Ruse நகரில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

நாட்டையே உலுக்கிய Viktoriaவின் கொலையின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக செய்திகள் வெளியாகின.

தொலைக்காட்சி பத்திரிகையாளரான Viktoria, ஐரோப்பிய ஒன்றிய நிதி மோசடி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார்.

அந்த மோசடி விசாரணைக்கும் Viktoriaவுக்கும் நெருங்கிய தொடர்பு இல்லை என்றாலும் அந்த நிகழ்ச்சி ஊழலுக்கு பேர் போன பல்கேரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நேரத்தில் Viktoria கொல்லப்பட்டதால் அது அரசியல் தொடர்புள்ள ஒரு கொலை என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் பல்கேரிய அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் பல்கேரியாவைச் சேர்ந்த Severin Krasimirov என்னும் ஒரு நபரை பொலிசார் ஜேர்மனியில் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக பேட்டியளித்துள்ள பல்கேரியாவின் உள்துறை அமைச்சரான Mladen Marinov, கொலை செய்யப்பட்ட Viktoriaவின் உடலில், குற்றவாளியின் DNA கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் விசாரணை அதிகாரிகள், Viktoriaவின் கொலைக்கும் அவரது வேலைக்கும் தொடர்பில்லை என்று கண்டறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரொமேனியாவைச் சேர்ந்த ஒரு நபர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணைக்குப்பின் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் பல்கேரிய தலைமை விசாரணை அதிகாரியான Sotir Tsatsarov, Viktoriaவின் கொலைக்கும் அவரது வேலைக்கும் தொடர்பிருக்கிறதா இல்லையா என்பதைக் குறித்து தன்னால் இப்போது எதுவும் கூற இயலாது என்று தெரிவித்துள்ளார்.

பல்கேரிய பிரதமர் Boyko Borissovவும் பங்கு கொண்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய Tsatsarov, ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ள Severin Krasimirov பல்கேரியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்