வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா என்று பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தனது வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா என்று பார்க்க முயற்சித்த பவேரியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அவர் எட்டரை பில்லியன் யூரோக்கள் கடன் தொகை செலுத்த வேண்டியிருப்பதாக வந்திருந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தன் மகனுடன் காலை உணவு சாப்பிட உட்கார்ந்த Angelika Rouyer (33) தனது வங்கியின் ஆன்லைன் appஇல் தன் கணக்கில் ஏதாவது பணம் இருக்கிறதா என்று பார்த்தார்.

அப்போது அவர் எட்டரை பில்லியன் யூரோக்கள் கடன் வைத்திருப்பதாக அதில் ஒரு செய்தி வந்திருந்தது.

நன்றி, உங்கள் கடன் தொகை €8,590,000,000.42 என்று அந்த செய்தி கூறியதைக் கண்ட Angelikaவுக்கு மாரடைப்பே ஏற்பட்டது போலிருந்தது.

அதிர்ச்சியில் அவர் கையிலிருந்த பிரட் ரோல் கீழே விழுந்ததைக்கூட அவர் கவனிக்கவில்லை.

அவர் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடத் தொடங்கின, தன் கணவர் தனது கிரெடிட் கார்டை எடுத்து ஏதாவது வாங்கி விட்டாரா, அல்லது யாராவது தனது கார்டை திருடி எதையாவது வாங்கியிருக்கிறார்களா என குழம்பிப் போனார் Angelika.

வங்கியில் சென்று விசாரித்தபோது முதலில் சரியான விளக்கம் கொடுக்காத வங்கி பின்னர் Angelika பயன்படுத்தும் வங்கியின் app காலாவதி ஆனது என்றும் அதனால்தான் இவ்வாறு தவறான ஒரு செய்தி வந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த பெரிய தவறுக்குப் பின் விழித்துக் கொண்ட வங்கி, தனது வாடிக்கையாளர்களிடம் தங்கள் வங்கி appஐ அப்டேட் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியது.

இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த Angelika, தான் எவ்வளவு அதிர்ச்சிக்குள்ளானார் என்பது குறித்து விவரித்தபின், வங்கி அவரிடம் மன்னிப்புக் கோரியதோடு ஒரு பெரிய பொக்கேவையும் அனுப்பி வைத்தது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers