ஜேர்மனில் அதிவேக ரயிலில் தீவிபத்து: 510 பயணிகள் மீட்பு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
269Shares
269Shares
ibctamil.com

ஜேர்மனில் அதிவேக ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து காரணமாக கொலோன் மற்றும் பிராங்க்பர்ட் ஆகிய நகரங்களுக்கு இடையே உள்ள அதிவேக ரயில் பாதை மூடப்பட்டது.

510 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர், சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இரண்டு வண்டிகள் தீப்பிழம்புகளால் எரிந்து சேதமடைந்துள்ளன. மீட்கப்பட்ட பயணிகள் அருகிலுள்ள கிராமப்புற சட்டசபை மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, மதியம் பிற்பகுதியில் தங்கள் பயணத்தை தொடர முடிந்தது.

இந்த தீவிபத்தின் காரணமாக, அருகில் உள்ள பெரிய A3 நெடுஞ்சாலை பகுதியும் தற்காலிகமாக மூடப்பட்டது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்