ஆறு ஆண்டுகள் பெற்றோரை பிரிந்த மாணவன்: பிறந்த நாளுக்கு நண்பர்கள் அளித்த மறக்க முடியாத பரிசு

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் மருத்துவம் பயின்று வரும் யேமன் நாட்டவரான இளைஞருக்கு நண்பர்கள் அளித்த பிறந்த நாள் பரிசு கண்கலங்க வைத்துள்ளது.

யேமன் நாட்டவரான குறித்த இளைஞர் ஜேர்மனியில் மருத்துவம் பயில வந்துள்ளார். ஆனால் பொருளாதார சூழல் காரணமாக அவரலால் கடந்த 6 ஆண்டுகளாக யேமன் சென்று தமது பெற்றோரை சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை.

இந்த நிலையில் அவரது பிறந்த நாள் அன்று நண்பர்கள் அனைவரும் அவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு ஒன்றை அளித்துள்ளனர்.

சம்பவத்தன்று வீடியோ உரையாடல் மூலம் அந்த இளைஞரின் பெற்றோரை அவருடன் பேச வைத்துள்ளனர்.

அப்போதே அவருக்கு கண்களில் இருந்து கண்ணீர் வழியத்துவங்கியுள்ளது. இதன் அடுத்த சில நிமிடங்களில் அவரின் பெற்றோரே நேரில் வந்து மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நீண்ட ஆறு ஆண்டுகள் சந்திக்காமல் இருந்த பெற்றோர் தமது கண்முன்னே நடந்து வருவது கண்டு ஆனந்த கண்ணீர் விட்ட அந்த இளைஞர் தமது பெற்றோரை கட்டியணைத்துள்ளது சக மாணவர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்