ஜேர்மனியில் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Report Print Fathima Fathima in ஜேர்மனி

ஜேர்மனியில் பணி நிமித்தமாக ஒருவர் வெளியிடங்களுக்கு செல்லும் போது அதற்காக பயணம் செய்யும் நேரத்தை பணி நேரமாக கணக்கிட்டு சம்பளம் வழங்க வேண்டும் என பெடரல் தொழிலாளர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Rhineland-Palatinateவை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்ந்த வழக்கிலேயே இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவரது முதலாளி வேலைக்காக சீனாவுக்கு அனுப்பிய நிலையில், ஜேர்மனிக்கு திரும்ப நான்கு நாட்கள் பயணத்திற்கே செலவானதாம்.

8 மணிநேரத்துக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட்ட போதும், காத்திருப்பு நேரமான 37 மணிநேரத்தையும் பணிநேரமாக கணக்கிட்டு வழங்குமாறு வழக்கு தொடர்ந்தார்.

மேலும் விமானத்தில் பிஸினஸ் வகுப்பில் டிக்கெட் எடுத்து தருமாறும் கூறியுள்ளார், இதுதொடர்பான விசாரணையின் போதே, நீதிபதி இப்படியொரு தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அதாவது, முதலாளி வேலைக்காக தொழிலாளர் ஒருவரை தற்காலிகமாக வெளிநாட்டுக்கு அனுப்பும் பட்சத்தில் பயணத்திற்கான நேரத்தை பணிநேரமாக கணக்கிட்டு சம்பளம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்