10 வயதில் எனது பாட்டியை கட்டியணைத்தேன்: இளம் அகதி சிறுவனின் வாழ்க்கை பதிவு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் 15 வயதான அகதி சிறுவன் கவிதைகளால் தனது வாழ்க்கை அனுபவத்தை விவரித்துள்ளான்.

போர் நிறைந்த சிரியாவில் இருந்து ஜேர்மனுக்கு வந்துள்ள அகதி சிறுவன் தனது வாழ்நாளை ஆபத்து நிறைந்த தருணத்திலேயே கழித்துள்ளான்.

ஆனால், ஜேர்மனியில் புதிய வாழ்வாதாரங்களை உருவாக்கி, தன்னார்வ காப்பாளர்களின் உதவியுடன் மேல்நோக்கி வந்துள்ளதாக அச்சிறுவன் கூறியுள்ளான்.

15 வயதான ரோஜின் என்ற அகதி சிறுவனே தனது வாழ்க்கை அனுபவங்களை கவிதை மூலமாக விவரித்துள்ளான். சிரியாவில் இருந்து ஜேர்மனிக்கு வந்துள்ள எனக்கு தற்போது வயது 15. எனது 10 வயதில் பாட்டியை கட்டியணைத்தேன்.

அதன் பின்னர்,எனது வாழ்க்கை சிதைந்துபோனது. அகதிகளுக்கான இளைஞர் கலாச்சார விழாவில் ரோஜின் பங்கேற்று கவிதை வாயிலாக இதனை வெளிப்படுத்தியுள்ளான்.

தஞ்சம் கோருவோர் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறும் அனுபவங்களைப் பற்றி நூல்களை வெளியிட்டார்கள். அவை பெர்லின் சார்ந்த குழுவான த கவிதைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

வாராந்திர செய்தி இதழான Der Spiegel புதிய அகதிகள் தங்கள் புதிய நாட்டில் அந்நியப்படுவதை உணர்வதற்கும், தங்களைத் தாங்களே கவிதை மூலம் வெளிப்படுத்தவும் உதவுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers