இளம்பெண் துஷ்பிரயோக வழக்கில் ஏழு சிரிய அகதிகள் கைது: நகரில் தொடரும் குற்றச்செயல்கள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தொடரும் குற்றச் செயல்களால் குற்ற நகரமாக மாறிவரும் தென்மேற்கு ஜேர்மன் நகரம் ஒன்றில் இளம்பெண் ஒருவரைக் கூட்டு வன்புணர்வு செய்ததற்காக ஏழு சிரிய அகதிகள் உட்பட எட்டு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Freiburg நகரின் நைட் கிளப் ஒன்றில் சந்தித்த ஒரு பெண்ணின் மதுபானத்தில் போதை மருந்தைக் கலந்து மயக்கி இன்னும் ஏழு பேருக்கு இரையாக்கியிருக்கிறான் ஒருவன்.

கிளப்புக்கு அருகிலுள்ள ஒரு இடத்திற்கு அவளைக் கொண்டு சென்று அந்த எட்டு பேரும் அவளை மாறி மாறி சீரழித்திருக்கின்றனர்.

அந்தப் பெண்ணின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட DNAவின் அடிப்படையில் அந்த குற்றவாளிகளில் சிலரை அடையாளம் கண்டுபிடித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

19 முதல் 29 வயது வரையுள்ள ஏழு சிரிய அகதிகள் மற்றும் ஒரு ஜேர்மானியர் உட்பட எட்டு பேரை இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதுபோன்ற வெறுக்கத்தக்க நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்று தெரிவித்துள்ள நகர மேயரான Martin Horn, குற்றவாளிகளுக்கு உடனடியாக தக்க தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் கூறியுள்ளார்.

அழகிய இயற்கைக் காட்சிகளும் சிறந்ததொரு பல்கலைக்கழகமும் வாழ்வதற்கேற்ற சுற்றுச் சூழலும் கொண்ட நகரமாகிய Freiburg நகரத்தில் 2016 தொடங்கி இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது மக்களை வருத்தத்திற்குள்ளாக்கியிருக்கிறது.

இதற்கு முன், நடுத்தர வயதுடைய நபர் ஒருவர் ஒரு கூட்டம் இளைஞர்களால் அடித்துக் கொல்லப்பட்டது, ஜாகிங் சென்ற 27 வயது பெண் ஒருவர் ட்ரக் டிரைவர் ஒருவரால் கொல்லப்பட்டது, குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் கும்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது என தொடர்ச்சியாக பல குற்றச் செயல்களை நகரம் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers